Tuesday 17 November 2015

மறக்க முடியாத ஒரு புகைப்படம்

மறக்க முடியாத ஒரு புகைப்படம்
1987 இல் என்னுடைய இலக்கிய உலா, இலக்கிய விருந்து ஆகிய இலக்கியத்திறனாய்வு நூல்களும், அடிவானத்து ஒளிர்வுகள் நாவலும் கொழும்பு ரன்முது ஹோட்டலில் வெளியிடப்பட்டது. விழாவில் ஏற்புரைவழங்கும் நான்......

Monday 16 November 2015

எனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பு


எனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பு

சமூக வலைத் தளம் (Social Networking Site) என்பது ஒத்த கருத்துடையோர் அல்லது செயற்பாடையோரின் சமூகத்தை வளர்க்கவும் அவர்களிடையே உள்ள சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்தவும் வழிசெய்கின்ற ஓர் இணையச் சேவைத்தளமாகும். இவ்வகையான இணையத்தளங்கள் ஒத்த நோக்குடைய சமூகத்தை எப்போதும் ஒன்றாக இணைத்து வைத்திருத்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு பொதுவான சமூக வலைத் தளம் ஒவ்வொரு பயனர் குறித்த தகவல்களையும் (சுயவிவரம்), அவரது சமூக பிணைப்புகள் மற்றும் பல்வேறு சேவைகளையும் கொண்டிருக்கும். இந்த வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள், இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள வழிசெய்கின்றன. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் முன்னாள் பாடசாலை/கல்லூரி மாணவர்கள், ஒரே பணிஃபணியிடம், வாழிடம் போன்ற பகுப்புகளில் தங்கள் நண்பர்களை (தன்விவர குறிப்புக்கள் மூலம்) அடையாளம் காணக்கூடிய தளங்களையும் நம்பிக்கைக்குரிய பரிந்துரை அமைப்புகளை வழங்கும் அமைப்புகளையும் கொண்டுள்ளன. இவற்றில் உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப் படுபவையாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் என்பன உள்ளன. மேலும் ஆர்க்குட் , லிங்டின் மற்றும் கூகுள்10 போன்ற பல தளங்கள் உள்ளன.

பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர்.

முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல், முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.

முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும்இ முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப் படுகிறது. முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு.

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முகநூலில் பல நண்மைகளும் தீமைகளும் உள்ளன. இதனைப் பயன்படுத்துவோர் கையிலே அவை உள்ளன. ஒத்த கருத்துடையோர் அல்லது ஒத்த செயற்பாடையோர் நண்பர்களாக இணையும் போது பெருமளவில் பிரச்சினை ஏற்படுவதில்லை. மாறாக தெரியாதவர்கள் அல்லது ஒவ்வா கருத்துடையோர் அல்லது ஒவ்வா செயற்பாடையோர் இணையும் போதே பிரச்சினைகள் எழுகின்றன. சங்கடங்கள் எழுகின்றன. எனவே எமக்கு நன்கு தெரிந்த நண்பர்களை உறவுகளை ஒத்த கருத்துடையோரை அல்லது ஒத்த செயற்பாடையோரை மாத்திரம் எமது பக்கத்தில் இணைத்து வைத்திருப்போம். இத்தகைய ஆரோக்கியமான தொரு மாற்றத்தினை மேற்கொள்ள எனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பாக இதனை முன்வைக்கின்றேன்.

Thursday 12 November 2015


 தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

அகவை 56 இல் பாதம் பதித்த என்னை வாழ்த்தி, 
வாழ்த்துக்களை நேரடியாகவும், தொலைபேசி மூலமும்
தெரிவித்த உறவுகளுக்கும் - மற்றும்
முகநூல், கூகுள்+, டுவிட்டர் உறவுகளுக்கும் -
என் மனப்பூர்வமான 
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உறவுகளே உங்கள் வாழ்த்துக்கள் -
மேலும் என்னை தெம்படைய வைத்து விட்டன.
நன்றி, நன்றி, நன்றி


Tuesday 3 November 2015

வாழ்க்கையில் மறக்க முடியாத - மயிரிழையில் உயிர் தப்பிய பயங்கரமான அனுபவம் 
1989ம் ஆண்டு - கண்டி மாவட்டத்தில் உள்ள வாரியகலை தமிழ் வித்தியாலயத்தில் நான் கற்பித்துக் கொண்டிருந்தேன். இலங்கையில் தென் பகுதியில் ஜே.வி.பி வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.
பாடசாலைக்குச் செல்லும் வழியில் பேராதனைப் பல்கலைக்கழக வளைவு வட்டத்தில் முண்டம் இல்லாத தலைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். வாரியகலையில் இறங்கினால் பாடசாலை சந்தியில் சில சடலங்கள்இ டயர்போட்டு எரிக்கப்படும் சடலங்கள்இ ஆற்றில் மிதந்து வரும் சடலங்கள் .... இவைகளைப் பார்த்துப் பார்த்து மனசு இசைவாக்கப்பட்டுவிட்டது.
அரசாங்கத்தால் இக்கால கட்டத்தில் Prra எனும் படைப்பிரிவு வன்முறைகளை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
1989 மார்ச் மாதம் -
பாடசாலை அண்மையில் வரும் வழியில் பல சடலங்கள் - மாணவர்கள் எவரும் பாடசாலைக்கு வரவில்லை.
அந்தப்பிரதேசமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது.
9 மணிக்குப் போல பாடசாலையை மூடிவிட்டு தெல்தோட்டையில் இருந்து கண்டிநோக்கி வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பஸ்ஸிலும் ஏழெட்டுப் பயணிகள் மாத்திரமே இருந்தார்கள். ஹிந்தகலை எனும் இடத்தில் பொலிஸார் நான் வந்த பஸ்ஸை இடைமறித்து எம்மை இறங்கச் சொல்லி வரிசையாக நிறுத்தி எம்மை பரிசோதனை செய்தனர்.
கெட்ட காலம் முதுமாணிப் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக அடையாள அட்டையை அவர்கள் கண்டு கொண்டார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் பொலிசுக்கு அக்காலத்தில் அலர்ஜிக். போதாக் குறைக்கு என் அடையாள அட்டை அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டப்படிப்புக்கானது.
பஸ்ஸில் வந்த ஏனைய பயணிகளை அனுப்பி விட்டு என்னை மட்டும் நிறுத்திக்கொண்டார்கள். நிறுத்திக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் கதைத்த கதைகள்.... என்னைப் பற்றிய நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது. இரத்தம் உரைந்து விட்டதைப் போல ஓர் உணர்வு.
அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் உள்ளம் நடுங்குகின்றது.....
நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கையில் கனவிலும் எதிர்பாராத ஒரு நிகழ்வு இடம் பெற்றது.
அவ்வழியே வந்த மற்றுமொரு பொலிஸ் ஜிப் வண்டி எம் அருகே நிறுத்தப்பட்டது. அந்த ஜிப் வண்டியிலிருந்து என்னுடைய சாச்சா (சித்தப்பா) வாப்பாவின் உடன் பிறந்த தம்பி இறங்கி வந்தார். சாச்சா கண்டி பொலிஸில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் எனக்கு என்னுயிர் மீண்டது போல ஓர் உணர்வு.
சாச்சா நிலைகளை விசாரித்து என்னைத் தடுத்து வைத்திருந்த அதிகாரியிடம் நீண்டநேரம் கதைத்து என்னை அவர் வந்த ஜீப் வண்டியிலே கண்டிக்கு அழைத்து வந்தார்.
அச்சமயம் சாச்சா வந்திரா விட்டால்...
இப்போது நினைத்தாலும் புல்லரிக்கின்றது.
மயிரிழையில் இறைவன் என்னைக் காப்பாற்றிய இரண்டாவது சந்தர்ப்பம் இது வாகும்.