பொதுவாக இலங்கையில் நடைபெறும் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் பொருத்தவரையில் நூறு பேரைத் திரட்டுவது என்பது ஒரு சாதனையாக இருக்கும். நூல் வெளியீட்டின் போது முதல் பிரதி சிறப்புப் பிரதி என்று பெறுவோர் பட்டியல் நீண்டிருக்கும். ஆனால் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா வெளியிட்டு விழா அழைப்பிதழில் இத்தகைய பட்டியல்களைக் காணமுடியவில்லை. இருப்பினும் விழா நடைபெற்ற நேரத்தில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நிகழ்வின் நிகழ்ச்சிகள் புதினமாகவும் அதிர்ச்சியாகவே இருந்தது.
கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சர்வதேச ரீதியில் குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்று இலங்கைக்குப் பெருiமை தேடித்தந்த மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் விழா ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல் துறையில் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டார்.
நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் இலங்கையில் முன்னனி சிந்தனையாளர்களில் ஒருவரான அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன், திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.
உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்கள் தன்னலமற்ற ஒரு உளவலவியாளலார் சுமார் நான்கு தசாப்த காலமாக சுமார் 2500 மேற்பட்டோரை உளவியல் சிகிச்சை மூலமாக குணப்படுத்தியுள்ளார். இவர் சேவைக்காக ஒரு சதமேனும் பணமோ, அல்லது அன்பளிப்புகளோ பெறுவதில்லை. இத்தகைய சேவைகளை மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் இந்நூலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன் உளவியல் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.
இந்த விழாவின் போது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்களை பொன்னாடை போர்த்தியும், பூமாலை அணிவித்தும் 1998 கின்னஸ் சாதனையில் அவ்வாண்டுக்கான அச்சுப்பதிவில் சிறிய அளவு கொண்டதாக பதிவாகியிருந்த குர்ஆன் பிரதியொன்றையும் வழங்கியும் கௌரவித்தார்.
அதனைத்தொடர்ந்து மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமாரன் - இருமொழி வித்தகர் என்றும், தொழிலதிபர் ஏ.ஆர்.எஸ். அல்ஹாஜ் அரூஸ் - மற்றும் அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் சேவைச்செம்மல் என்றும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் இதழியல் வித்தகர் என்றும் உளவியல் விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம். அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல் என்றும் பட்டம் சூட்டி பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நாட்டின் நாலாபுறத்திலுமிருந்து பெரும் எண்ணிக்கையானோர் இவ்விழாவில் கலந்துக்கொண்டதுடன் பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் 500 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் 300 மேற்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிறைவான நூல் வெளியீட்டு விழாவாக இவ்விழாவை குறிப்பிடலாம்.
“ஓர் ஈர நெஞ்சனின் உலவியல் உலா "நூலானது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப் பணிப்பாளராக கொண்டியங்கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட 185 வது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 572 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 880 ஆகும்.
நன்றி:
* http://www.sonakar.com/2013/02/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/
*http://tamil.news.lk/news/sri-lanka/3552-2013-02-26-10-28-27
*http://www.jaffnamuslim.com/2013/02/blog-post_2441.html
No comments:
Post a Comment