'எங்கள் தேசம்' இணையத்தில் பிரசுரமான இவ்வாக்கம் முஸ்லிம் கல்விமான்களினதும், முஸ்லிம் அரசியல்வாதிகளினதும், புத்திஜீவிகளினதும், முஸ்லிம் ஊடகவியலாளர்களினதும் சிந்தனையைத்தூண்ட வேண்டும் என்ற நோக்கில் மறுபிரசுரம் செய்கின்றேன்.
-புன்னியாமீன்-
“இன்பத் தமிழ் எங்கள் மொழியாகும் இஸ்லாம் எங்கள் வழியாகும்” என்று வாழ்பவர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள். தமது குழந்தைகளையும் தமிழ் மொழிப் பாடசாலைகளிலேயே கல்வி பயில அனுப்புவார்கள். அன்றைய தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ்ப் பாட நூல்களில் இஸ்லாமிய ஆக்கங்கள் பெரும்பான்மையாக இடம்பெறவில்லை.
1949 முதல் 1953 வரை பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஓன்று “மணிவாசகம்”. இதில் ஏழாம் புத்தகம் ஒன்றில் ஒரு பாடத்தில் கூட இஸ்லாம் சம்பந்தமான ஆக்கம் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
1953இல் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்று “உமாவாசகம்” இதில் எட்டாம் புத்தகத்தில் இஸ்லாமிய ஆக்கங்கள் எதுவுமே இல்லை.
1954ல் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட தமிழ் நூல்களில் ஒன்று “உமாவாசகம்“ நான்காம் புத்தகம் இதிலுள்ள 25 பாடங்களில் 7ஆம் பாடம் “முகம்மது நபி” என்பதாகும், இதே காலப்பகுதியில் கற்பிக்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான் “பாலபோதினி” ஏழாம் புத்தகம், இதில்கூட இஸ்லாமிய கருத்துக்கள் அடங்கிய ஆக்கங்கள் இடம்பெறவில்லை.
இந்த மோசமான நிலையை அவதானித்த சேர் ராசிக் பரீத் (பா.உ) அவர்கள், 1955ஆம் ஆண்டளவில் முஸ்லிம் மாணவர்களுக்கென இஸ்லாமியக் கருத்துக்களடங்கிய ஆக்கங்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வற்புறுத்தியதோடு அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டார்.
இதன் விளைவாக, “முஸ்லிம் பாலர் வாசகம்” என்ற பாடப்புத்தகம், காலஞ்சென்ற ஏ.எல்.எம். இஸ்மாயீல், எஸ்.பி. சாமிநாதன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1962 காலப்பகுதியில் முஸ்லிம் பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கென “தமிழ் இலக்கியம் ஆபாடத்திட்டம்” என்ற பகுதி பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. இதற்கு முழு மூச்சாக உழைத்தவர், அன்றைய கல்வி, ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணிபுரிந்த மர்ஹூம் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள். இவரது முயற்சியால், முஸ்லிம் பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) மாணவர்களுக்கு முஹிதீன் புராணம், சீறாப் புராணம், புதுகுஷ்ஷாம், ஆசாரக்கோவை (அப்துல் மஜீத் புலவர்) என்பவை போதிக்கப்பட்டன.
1967 டிசம்பரிலும் அதற்குப் பின்னரும் முஸ்லிம் மாணவர்களுக்காக “ஆ“ பாடத்திட்டத்தில் இலக்கியத் தொகுப்பும் “உரைநடைத் தொகுப்பும்” என்ற நூல் அமுலுக்கு வந்தது. பின்னர் 1985இல் முஸ்லிம் மாணவர்களுக்காக அமுல்படுத்தப்பட்ட “ஆ” பாடத்திட்டம் நிறுத்தப்பட்டது. அத்தோடு, முஸ்லிம் மாணவர்களுக்காக இஸ்லாமிய கருத்துக்களடங்கிய ஆக்கங்கள் தமிழ் மொழிப் பாடங்களில் அருகி வந்த வரலாற்றைப் பின்வரும் அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
*
ஆண்டு 1985
புத்தகப் பெயர் ஆண்டு 7
பாடங்களின்எண்ணிக்கை 28
இஸ்லாமிய கருத்தாக்கம் 02
*
ஆண்டு 2000
புத்தகப் பெயர் ஆண்டு 7
பாடங்களின்எண்ணிக்கை 24
இஸ்லாமிய கருத்தாக்கம் 02
*
ஆண்டு 2004
புத்தகப் பெயர் ஆண்டு 7
பாடங்களின்எண்ணிக்கை 20
இஸ்லாமிய கருத்தாக்கம் 01
*
ஆண்டு 1999
புத்தகப் பெயர் ஆண்டு 8
பாடங்களின்எண்ணிக்கை 22
இஸ்லாமிய கருத்தாக்கம் 01
*
ஆண்டு - 2004
புத்தகப் பெயர் ஆண்டு - 8
பாடங்களின்எண்ணிக்கை - 18
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 2005
புத்தகப் பெயர் ஆண்டு - 8
பாடங்களின்எண்ணிக்கை - 20
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2009
புத்தகப் பெயர் ஆண்டு - 8
பாடங்களின்எண்ணிக்கை - 18
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1986
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை - 09
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1998
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை - 19
இஸ்லாமிய கருத்தாக்கம் - 03
*
ஆண்டு - 2004
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை - 16
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2005
புத்தகப் பெயர் ஆண்டு - 9
பாடங்களின்எண்ணிக்கை - 26
இஸ்லாமிய கருத்தாக்கம் - 03
*
ஆண்டு - 1986
புத்தகப் பெயர் ஆண்டு - 10
பாடங்களின்எண்ணிக்கை - 09
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1999
புத்தகப் பெயர் ஆண்டு - 10
பாடங்களின்எண்ணிக்கை - 12
இஸ்லாமிய கருத்தாக்கம் - 02
*
ஆண்டு - 1999
தமிழ் இலக்கியத் தொகுப்பு 10-11
பாடங்களின்எண்ணிக்கை - 18
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 1986
தமிழ் இலக்கியம் 11
பாடங்களின்எண்ணிக்கை - 17
இஸ்லாமிய கருத்தாக்கம் - 07
*
ஆண்டு - 1987
தமிழ் இலக்கியம் 11
பாடங்களின்எண்ணிக்கை - 09
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2000
தமிழ் இலக்கியம் 11
பாடங்களின்எண்ணிக்கை - 10
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2004
தமிழ் இலக்கியம் 11
பாடங்களின்எண்ணிக்கை - 15
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
*
ஆண்டு - 2007
தமிழ் இலக்கியம் 10
பாடங்களின்எண்ணிக்கை - 12
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 2007
தமிழ் இலக்கியத் தொகுப்பு 10-11
பாடங்களின்எண்ணிக்கை - 18
இஸ்லாமிய கருத்தாக்கம் - 00
*
ஆண்டு - 2004
தமிழ் இலக்கிய நயம்
பாடங்களின்எண்ணிக்கை - 40
இஸ்லாமிய கருத்தாக்கம் - 01
இந்த அட்டவணையை அவதானித்தால் தமிழ் மொழி மூலம் முஸ்லிம் பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களின் இஸ்லாமியக் கருத்துக்களடங்கிய பாடங்கள் எந்த அளவு புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன என்பது நன்கு விளங்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனம் செலுத்தாதது வியப்புக்குரியதே.
1986இல் பேராசிரியர் மர்ஹூம் ம.மு. உவைஸ் அவர்களும் அ.மு. அஜ்மல்கான் அவர்களும் சேர்ந்து எழுதிய “இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு” பாகம் 1இல் எழுதியுள்ள முன்னுரையில் இஸ்லாமிய இலக்கிய நூல்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவை என்று குறிப்பிட்டுள்ளனர். இவ்விதமிருந்தும் இலங்கைப் பாடநூல் வெளியீட்டுத் திணைக்களம் இஸ்லாமிய இலக்கிய ஆக்கங்களை ஏன் இருட்டடிப்புச் செய்தது என்பது விளங்கவில்லை.
எனவே, இதன் பின்பாவது தமிழ் மூலம் பாண்டித்தியம் பெற்ற முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் இதுவிடயமாகக் கவனமெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- எம்.ஐ.எம். ஹாலித் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) -
நன்றி: எங்கள் தேசம் Wednesday, 06 August 2014
No comments:
Post a Comment