அருமையான விளக்கம் கொண்ட கட்டுரை. உங்கள் காத்தான்குடி இணையத்தில் இடம் பெற்றது. மீள் பிரசுரம் செய்துள்ளேன்.
‘ஜனாப்’
என்பது ஓர் தமிழ் சொல்லா? என்பதை நோக்கம் போது நிச்சயமாக இது ஒரு தமிழ்
சொல் அல்ல. எனினும் இலங்கைக்குள் இச் சொற்கள் எவ்வாறு ஊடுறுவியது என்று
பார்க்கும் போது இவை தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த முஸ்லீம்களால்
இலங்கைக்குள் ஊடுறுவி, கடந்த நூற்றாண்டுகளில் இருந்து இச்சொற்கள்
இலங்கையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உருது
மொழியில் ‘ஜனாப் ஜி’, ‘பாய் சாப்’, ‘ஜி சாப்’ இதே போல் ஒரு பெரியவரை
அழைக்கும் போது அல்லது அதற்கு ‘ஆம்’ என கூறுவதற்கு ‘ஜி’ எனும் வார்த்ததை
உறுது மொழியில் வழக்கத்தில் இருந்த வருகின்றது. பேச்சு வழக்கில் சில
வித்தியாசங்களைக் கொன்டுள்ள ஹிந்தி-உறுது மொழிகளில் இருந்து வந்த
சொற்களாகவே ஜனாப் எனும் வார்த்தை உறுதியாகின்றது.
ஆண்களை
‘ஜனாப்’ என்றழைப்பதில் மொழி ரீதியான ஏதும் சிக்கல்கள் இல்லாவிட்டாலும்,
பெண்களை ‘ஜனாபா’ என அழைப்பதில் மிகப் பெரிய சிக்கல்கள் இருப்பது அரபு
தெரிந்த நாகரீகமான உலகத்தில் வாழும் பலருக்குத் தெரியாது.
‘ஜனாபா’
(ஜனாபத்) என்பது ஓர் அறபுப் பதமாகும். அதனை தமிழ் மொழியில்
பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர் எனும் பதத்தைத் தருகின்றது. எனவே ஜனாபா
என்று ஒரு பெண்ணை அழைக்கும் போது அவளது பெயருக்கு முன்னாள் பெருந்தொடக்கு
அல்லது சிறு தொடக்கு உடையவள் எனும் வார்த்தையை உபயோகித்தே அழைத்து
வருகின்றோம்.
ஓரு ஆணையோ
ஒரு பெண்ணையோ அவளது தந்தையைக் கொண்டே நபி (ஸல்) அவர்களும் அவர்களது
காலத்திலுள்ளவர்களும் அழைத்து வந்தனர். இது தான் ஓர் முன்மாதிரியும்கூட!
பொதுவாக உலக நடைமுறையில் ஓர் ஆணை ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது Mr.
என்றும் பெண்ணைக் குறிப்பிடும் போது Miss. என்றும் அழைக்கின்றோம்.
இதேநிலையில் திருமணம் செய்த பெண்ணை Mrs. என குறியிட்டு, கனவர் பெயரையோ அல்லது தனது பெயருக்குப் பின்னால் கனவரது பெயரையோ சேர்த்து அழைத்து வருகின்றோம்.
அதே சொல்லை
தமிழில் எழுதும் போது திரு, திருமதி, செல்வி இவ்வாறு எழுதுகிறோம். ஓர்
இஸ்லாமிய திருமணத்துக்காக அல்லது பள்ளிவாயல் விடயமாக ஓரு ஆணுக்கோ அல்லது
ஓர் பெண்ணுக்கோ அழைப்பு அல்லது கடிதம் எழுதும் போது, திரு, திருமதி எனும்
சொற்களை உபயோகிப்பதில்லை! இவை தமிழ் வார்த்தை என்பதால்
தவிர்க்கப்படுகின்றன. ஜனாப் ஓர் மந்திர வார்த்தை என்பது போலவும் சமூகத்தில்
கருதப்படுகின்றது. எனினும் அழைப்பும் கடிதமும் சுத்தத் தமிழிலும்
செந்தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்!
ஒருவருக்கு
ஜனாப் எனும் வார்த்தையை உபயோகிக்காமல் அழைப்பு அல்லது கடிதம் சென்றால்
அவரது முகம் சுருங்கிவிடுகிறது. பரிசுப் போட்டி ஒன்றில் 1000 ரூபா
வெற்றியீட்டிய ஓர் பத்திரம் திரு, Mr. என அழைக்கப்பட்டு வரும் போது முகம்
மலர்கின்றது. அங்கு வார்த்தைகள் மறைக்கப்படுகின்றது. கரு
நோக்கப்படுகின்றது.
சமூகத்தில்
உபயோகிக்கப்படும் எத்தனையோ வார்த்தைகளுக்கு எங்களுக்கு அர்த்தம்
தெரிவதில்லை. எனவே இந்த ஜனாப்-ஜனாபா பதங்களைத் தவிர்த்துக் கொள்வது சாலச்
சிறந்தது. அவ்வாறு தவிர்த்தாலும் சமூகத்தில் ஏதோ ஓர் புதிய மார்க்கத்தைக்
கொன்டுவந்திருப்பது போல் எமக்கும் சேறு பூசலாம். மொழி என்ன ….. எல்லாம்
செய்கின்றது!
ஹாஜி-ஹாஜியார்…
நபி (ஸல்)
அவர்கள் ஹஜ் செய்திருக்கிறார்கள். அவர்களுடன் இருந்த ஸஹாபாக்களும் ஹஜ்
செய்திருக்கறார்கள். இவர்களை யாரும் ஹாஜி என்றோ ஹாஜியார் என்றோ
அழைப்பதில்லை! உதாரணமாக அல்ஹாஜ் முஹம்மது நபி (ஸல்), அல்ஹாஜ் அபூபக்கர்
(ரழி), ஹாஜியானி ஆயிஷா (ரழி), அல்ஹாஜ் இமாம் புகாரி (ரஹ்) ….. எங்களுக்கே
ஓர் மாற்றம் விளங்குகின்றதல்லவா? ஆனால் புரிகின்றதா? (புரியாது)
ஹாஜி என்பது
சமூகத்தில் பட்டம் பெற்று வாழ்வதற்கும் தன்னை மக்கள் மதிப்பதற்கும்
இலங்கையிலும் இந்தியாவிலும் அன்று உருவாக்கப்பட்ட வார்த்தைகள் அவை. ஹஜ்ஜின்
போது இஹ்ராம் அணிந்த நிலையிலேதான் ஓருவர் ஹாஜியாகிறார். இஹ்ராம்
களையப்பட்டதும் அவருக்கிருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
மீண்டும் ஓர் சாதாரண மனிதனாக ஊர்திரும்புகிறார். அவரது ஹஜ் ஒன்றில் ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்கும் அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கும். இதனால்தான்
‘ஏற்றுக் கொள்ளப்பட் ஹஜ்’ எனும் வார்த்தையை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
ஹஜ் செய்த
ஒருவருக்கு ஹாஜியார் எனும் வார்த்தையை எழுதாமல் அனுப்பப்படும்
அழைப்புக்களும், கடிதங்களும், கோரிக்கைகளும் முஸ்லீம் சமூகத்தில்
மறுக்கப்படுகின்றன! அவை நிராகரிக்கப்படுகின்றன! மனிதனில் பெருமை
குடியிருப்பதால், தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலனை
எதிர்பார்க்கின்றான்.
ஓர்
பள்ளிவாயல் நிர்வாகியாக இருப்பதற்கு ஹாஜிப்பட்டம், தேர்தலில் நிற்பதற்கு
ஹாஜிப்பட்டம், ஊர்த்தலைமைகளில் அங்கம் பெறுவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஓர்
ஹாஜிப்பட்டம்!
இன்றைய
முஸ்லீம் சமூகத்தின் பதவிக்கான பட்டங்கள் இவை! தொழுகையாளிகளுக்கு என்ன
பட்டம்? நோன்பாளிக்கு என்ன பட்டம்? விடை இல்லை! இதனால் பாமர, ஏழை மக்களிடம்
தங்களை செல்வாக்குள்ளவர்களாக காட்டிக் கொள்வதற்காக அன்று அறியாமையால்
இவ்வாறான பட்டங்கள் புழக்கத்தில் இருந்தன. அறிவுள்ள சிந்திக்க்கூடிய நவீன
ஓர் முஸ்லீம் சமூகத்திலும் இன்றும் இவ்வாறான பட்டங்களால் பிளவுகளும்
போட்டிகளும் காணப்படுவது வெட்கத்திற்குரியவை!
நாங்கள்
இவ்வுலகில் செய்யும் நற் செயல்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில்
பட்டங்களையும் மாளிகைகளையும் அருளுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்றான்.
யார் யாருக்கு என்ன பட்டங்கள் என்பதும் இறைவனால் கூறப்பட்டவை.
ஹாஜி-ஹாஜியார்
எனும் பட்டங்களில் இருப்போர் அதிகமானோர் சமூகத்தில் நேர்மையற்ற அரசியல்
வாதிகளாகவும், நேர்மையற்ற ஊர்த்தலைவர்களாகவும், வட்டிக்குக்
கொடுப்பவர்களாகவும், தனது மகனுக்கு அதிக சீதனம் பெற்றவர்களாகவும் அல்லது
தனது மாப்பிள்ளைக்கு அதிக சீதனம் வழங்கியவர்களாகவும் இருப்பது முஸ்லிம்
சமூகத்தின் மற்றுமொரு தலைகுணிவாக இருந்து வருகின்றன.
எனவே மனிதனை
மனிதனாக மதித்து தக்வா வாதிகள் யார்? உண்மையாளர்கள் மற்றும் நேர்மையாளர்கள்
யார் என்று பகுதிதறிந்து, நல்லடியார் கூட்டத்தில் சமமாக வாழவும், அல்லாஹ்
எங்களுக்கு மறுமையில் வழங்கும் மறுமைப்பட்டங்களுக்காகவும் நாம் இப்புனித
ரமழானில் அவன்பால் ஒன்றிணைவோம்!
16/07/2013 — yourkattankudy.com
-ரமழான் சிந்தனை
-MJ
நன்றி ; உங்கள் காத்தான்குடி
No comments:
Post a Comment