10வது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணத்துக்கான போட்டிகள் இன்று 2011 பெப்ரவரி 19ல் ஆரம்பமாகின்றது. முதல் போட்டியில் இந்தியா, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி மிர்பூரில் (வங்காளதேசம்) பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் இம்முறை இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் நாடுகளால் இணைந்து நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா நேற்று முன்தினம் 2011 பெப்ரவரி 17ல் டாக்காவில் கோலாகலமாக நடைபெற்றது.
இப் போட்டிகள் 2011 பெப்ரவரி 19ல் இருந்து ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. இதன் படி பிரிவு ஏ யில் அவுஸ்திரேலியா, கனடா, கென்யா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், இலங்கை, சிம்பாப்வே ஆகிய அணிகளும், பிரிவு பீ யில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். மொத்தமாக 49 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த உலககிண்ணப் போட்டிகளை பாக்கிஸ்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியினர் தாக்கப்பட்ட நிகழ்வை அடுத்து சர்வதேச கிரிக்கட் சபை பாக்கிஸ்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது. லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது. பாக்கிஸ்தான் 14 ஆட்டங்களை ஓர் அரையிறுதி உட்பட நடத்துவதாக இருந்தது. அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காளதேசத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணப் போட்டிகள் நடந்துள்ளன. 1975 நடைபெற்ற முதலாவது உலகக்கிண்ணப் போட்டியிலும் 1979ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக்கிண்ணப் போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து வெற்றிபெற்றது. 1987, 1999, 2003, 2007 ஆகிய நான்கு முறையும் அவுஸ்திரேலியாவே உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. 1983ல் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியாவும் 1992ல் நடந்த போட்டியில் பாகிஸ்தானும் 1996ல் இலங்கையும் உலகக்கிண்ணத்தை வென்றெடுத்தது. இருப்பினும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து இதுவரை ஒருமுறை கூட உலகக்கிண்ணத்தை வெல்லவில்லை. அதேபோல தென் ஆப்பிரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் உலகக்கிண்ணம் வெறும் கனவாகவே இதுவரை இருந்துவந்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்:
இந்தியா
எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை
சர்தார் படேல் குஜராத் ஸ்டேடியம், மோத்தீரா, அகமதாபாத்
விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், நாக்பூர்
பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம், டெல்லி
எம். சின்னச்சாமி ஸ்டேடியம், பெங்களூர்
பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், மொஹாலி
வாங்கடே ஸ்டேடியம், மும்பை
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
வங்கதேசம்
ஷெர் பங்களா தேசிய ஸ்டேடியம், மிர்பூர், டாக்கா
ஷெர் அகமது செளத்ரி ஸ்டேடியம், சிட்டகாங்
இலங்கை
ஆர். பிரேமதாஸ ஸ்டேடியம், கொழும்பு
பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், கண்டி
மகிந்தா ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஹம்பாந்தோட்டை
நேரஅட்டவணை
* பிப் 19 வங்காளதேசம் Vs இந்தியா பிரிவு -பி மிர்பூர் (வங்காளதேசம்) பகல் 2 மணி
* பிப் 20 கென்யா Vs நியூசிலாந்து பிரிவு - ஏ சென்னை காலை 9.30 மணி
* பிப் 20 இலங்கை Vs கனடா பிரிவு -ஏ ஹம்பாந்தோட்டை (இலங்கை) பகல் 2.30 மணி
* பிப் 21 அவுஸ்திரேலியா Vsசிம்பாப்வே பிரிவு- ஏ அகமதாபாத் பகல் 2.30 மணி
* பிப் 22 இங்கிலாந்து Vs நெதர்லாந்து பிரிவு -பி நாக்பூர் பகல் 2.30 மணி
* பிப் 23 கென்யா Vs பாக்கிஸ்தான் பிரிவு -ஏ ஹம்பாந்தோட்டை பகல் 2.30 மணி
* பிப் 24 தென் ஆப்பிரிக்கா Vs மேற்கிந்தியத் தீவுகள் பிரிவு -பி டெல்லி பகல் 2.30 மணி
* பிப் 25 அவுஸ்திரேலியா Vs நியூசிலாந்து பிரிவு -ஏ நாக்பூர் காலை 9.30 மணி
* பிப் 25 வங்காளதேசம் Vs அயர்லாந்து பிரிவு -பி மிர்பூர் பகல் 2 மணி
* பிப் 26 இலங்கை Vs பாக்கிஸ்தான் பிரிவு -ஏ கொழும்பு பகல் 2.30 மணி
* பிப் 27 இந்தியா Vs இங்கிலாந்து பிரிவு - பி பெங்களூர் பிறபகல் 2.30 மணி
* பிப் 28 கனடா Vs சிம்பாப்வே பிரிவு -ஏ நாக்பூர் காலை 9.30 மணி
* பிப் 28 நெதர்லாந்து Vs மேற்கிந்தியத் தீவுகள் பிரிவு -பி டெல்லி பகல் 2.30 மணி
* மார்ச் 1 இலங்கை Vs கென்யா பிரிவு - ஏ கொழும்பு பகல் 2.30 மணி
* மார்ச் 2 இங்கிலாந்து Vs அயர்லாந்து பிரிவு - பி பெங்களூர் பகல் 2.30 மணி
* மார்ச் 3 நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பிரிவு - பி மொகாலி பகல் 2.30 மணி
* மார்ச் 3 கனடா Vs பாக்கிஸ்தான் பிரிவு - ஏ கொழும்பு பகல் 2.30 மணி
* மார்ச் 4 நியூசிலாந்து Vs சிம்பாப்வே பிரிவு -ஏ அகமதாபாத் காலை 9.30 மணி
* மார்ச் 4 வங்காளதேசம் Vs மேற்கிந்தியத் தீவுகள் பிரிவு - பி மிர்பூர் பகல் 2 மணி
* மார்ச் 5 இலங்கை Vs அவுஸ்திரேலியா பிரிவு - ஏ கொழும்பு பகல் 2.30 மணி
* மார்ச் 6 இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்கா பிரிவு - பி சென்னை காலை 9.30 மணி
* மார்ச் 6 இந்தியா Vs அயர்லாந்து பிரிவு - பி பெங்களூர் பகல் 2.30 மணி
* மார்ச் 7 கனடா Vs கென்யா பிரிவு - ஏ டெல்லி பகல் 2.30 மணி
* மார்ச் 8 நியூசிலாந்து Vs பாக்கிஸ்தான் பிரிவு - ஏ பல்லேகெல, பகல் 2.30 மணி
* மார்ச் 9 இந்தியா Vs நெதர்லாந்து பிரிவு - பி டெல்லி பகல் 2.30 மணி
* மார்ச் 10 இலங்கை Vs சிம்பாப்வே பிரிவு - ஏ பல்லேகெல பகல் 2.30 மணி
* மார்ச் 11 அயர்லாந்து Vs மேற்கிந்தியத் தீவுகள் பிரிவு - பி மொகாலி காலை 9.30 மணி
* மார்ச் 11 வங்காளதேசம் Vs இங்கிலாந்து பிரிவு - பி சிட்டகாங் பகல் 2.30 மணி
* மார்ச் 12 இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா பிரிவு - பி நாக்பூர் பகல் 2.30 மணி
* மார்ச் 13 கனடா Vs நியூசிலாந்து பிரிவு - ஏ மும்பை காலை 9.30 மணி
* மார்ச் 13 அவுஸ்திரேலியா Vs கென்யா பிரிவு - ஏ பெங்களூர் பகல் 2.30 மணி
* மார்ச் 14 வங்காளதேசம் Vs நெதர்லாந்து பிரிவு - பி சிட்டகாங் காலை 9 மணி
* மார்ச் 14 பாகிஸ்தான் Vs சிம்பாப்வே பிரிவு - ஏ பல்லேகெல பகல் 2.30 மணி
* மார்ச் 15 அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்கா பிரிவு - பி கொல்கத்தா பகல் 2.30 மணி
* மார்ச் 16 அவுஸ்திரேலியா Vs கனடா பிரிவு - ஏ பெங்களூர் பகல் 2.30 மணி
* மார்ச் 17 இங்கிலாந்து Vs மேற்கிந்தியத் தீவுகள் பிரிவு - பி சென்னை பகல் 2.30 மணி
* மார்ச் 18 அயர்லாந்து Vs நெதர்லாந்து பிரிவு - பி கொல்கத்தா காலை 9.30 மணி
* மார்ச் 18 நியூசிலாந்து Vs இலங்கை பிரிவு - ஏ மும்பை பகல் 2.30 மணி
* மார்ச் 19 வங்காளதேசம் Vs தென் ஆப்பிரிக்கா பிரிவு - பி மிர்பூர் காலை 9 மணி
* மார்ச் 19 அவுஸ்திரேலியா Vs பாக்கிஸ்தான் பிரிவு - ஏ கொழும்பு பகல் 2.30 மணி
* மார்ச் 20 கென்யா Vs சிம்பாப்வே பிரிவு - ஏ கொல்கத்தா காலை 9.30 மணி
* மார்ச் 20 இந்தியா Vs மேற்கிந்தியத் தீவுகள் பிரிவு - பி சென்னை பகல் 2.30 மணி
கால் இறுதிப் போட்டிகள்:
1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி
2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி
3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி
4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி
அரையிறுதிப் போட்டிகள்:
1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி
2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி
இறுதிப்போட்டி:
ஏப்ரல் 2: மும்பை- பகல் 2.30 மணி
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
இதுவரை மொத்தம் 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முறையே 1975, 1979, 1983, 1987, 1992, 1996, 1999, 2003, 2007 ஆண்டுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் இதுவரை அணிகளும், வீரர்களும் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகளின் விபரம் வருமாறு:
ஒரு போட்டியில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள்
* கேரி கிர்ஸ்டன் (தெ.ஆப்பிரிக்கா) - 188 (ஆட்டமிழக்காமல்-ஐக்கிய எமெரிட்ஸ் அணிக்கு எதிராக).
* கங்குலி (இந்தியா) - 183 (இலங்கைக்கு எதிராக)
* விவியன் ரிச்சர்ட்ஸ் (மே. இ.தீவு) - 181 (இலங்கைக்கு எதிராக)
* கபில் தேவ் (இந்தியா) - 175 (ஆட்டமிழக்காமல்-சிம்பாப்வேக்கு எதிராக)
* கிரேக் விஷார்ட் (சிம்பாப்வே) - 172 (ஆட்டமிழக்காமல்-நமீபியாவுக்கு எதிராக)
உலகக்கிண்ணப் போட்டிகளில் கூடிய ஓட்டங்களைப் பெற்றவர்கள்
* சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 1796 (36 போட்டிகள்)
* ரிக்கி பான்டிங் (அவுஸ்திரேலியா) - 1537 (39)
* பிரையன் லாரா (மே. இ. தீவு) - 1225 (34)
* சனத் ஜயசூரியா (இலங்கை) - 1165 (38)
* ஆடம் கில்கிறைஸ்ட் (அவுஸ்திரேலியா) - 1085 (31)
அதிக சதங்கள் பெற்றவர்கள்
* கங்குலி (இந்தியா) - 4
* மார்க் வாக் (அவுஸ்திரேலியா) - 4
* சச்சின் (இந்தியா) - 4
* ரிக்கி பான்டிங் (அவுஸ்திரேலியா) - 4
* ரமீஸ் ராஜா (பாக்கிஸ்தான்) - 3
அதிக அரை சதம் பெற்றவர்கள்
* சச்சின் (இந்தியா) - 13
* கிரீம் ஸ்மித் (தெ. ஆப்பிரிக்கா), கிரஹாம் கூச், மார்டின் குரோ, ஸ்டீவ் டிக்கோலா, ஹெர்ஷெல்லி கிப்ஸ் தலா 8 அரை சதங்கள்.
அதிக சிக்சர்கள் (6ஓட்டங்கள்) பெற்றவர்கள்
* ரிக்கி பான்டிங் (அவுஸ்திரேலியா) - 30
* கிப்ஸ் (தெ.ஆப்பிரிக்கா) - 28
* ஜெயசூர்யா (இலங்கை) - 27
* கங்குலி (இந்தியா) - 25
* மாத்யூ ஹெய்டன் (அவுஸ்திரேலியா) - 23
அதிக பவுண்டரிகள் (4) பெற்றவர்கள்
* சச்சின் (இந்தியா) - 189
* கில்கிறைஸ்ட் (அவுஸ்திரேலியா) - 141
* ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து) - 135
* பான்டிங் (அவுஸ்திரேலியா) - 130
* பிரையன் லாரா (மே.இ தீவு) - 124
சிறந்த பந்து வீச்சு
* மெக்கிராத் (அவுஸ்திரேலியா) - 7/15 (7 ஓவர்கள்) -நமீபியா
* ஆண்ட்ரூ பிக்கல் (அவுஸ்திரேலியா) - 7/20 (10 ஓவர்கள்) - இங்கிலாந்து
* வின்ஸ்டன் டேவிஸ் (மே.இ.தீவு) 7/51 (10.3 ஓவர்கள்) -அவுஸ்திரேலியா.
* கேரி கிளாமர் (அவுஸ்திரேலியா) - 6/14 (12 ஓவர்கள்) -இங்கிலாந்து.
* ஷேன் பாண்ட் (நியூசிலாந்து) -6/23 (10 ஓவர்கள்) -அவுஸ்திரேலியா.
அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்
* மெக்கிராத் (அவுஸ்திரேலியா) - 71
* வாசிம் அக்ரம் (பாக்கிஸ்தான்) - 55
* முரளிதரன் (இலங்கை) - 53
* சமிந்தா வாஸ் (இலங்கை) - 49
* ஸ்ரீநாத் (இந்தியா) - 44.
அதிக பிடிகளை எடுத்தவர்கள்
* பான்டிங் (அவுஸ்திரேலியா) - 25
* ஜெயசூர்யா (இலங்கை) - 18
* கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து)- 16
* லாரா (மே.இ. தீவு) - 16
* இன்சமாம் உல் ஹக் (பாக்கிஸ்தான்) - 16
ஒரு இனிங்சில் பெறப்பட்ட கூடிய ஓட்டங்கள்
* இந்தியா - 413 (பெர்முடாவுக்கு எதிராக)
* இலங்கை -398 (கென்யாவுக்கு எதிராக)
* அவுஸ்திரேலியா - 377 (தெ. ஆப்பிரிக்காவுக்கு எதிராக
* இந்தியா - 373 (இலங்கைக்கு எதிராக)
* நியூசிலாந்து - 363 (கனடாவுக்கு எதிராக)
ஒரு இனிங்சில் பெறப்பட்ட குறைந்த ஓட்டங்கள்
* கனடா - 36
* கனடா - 45
* நமீபியா - 45
* ஸ்காட்லாந்து - 68
* பாக்கிஸ்தான் - 74
கூடிய ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிபெற்ற அணிகள்
* இந்தியா - 257 (பெர்முடாவுக்கு எதிராக)
* அவுஸ்திரேலியா - 256 (நமீபியாவுக்கு எதிராக)
* இலங்கை - 243 (பெர்முடாவுக்கு எதிராக)
* அவுஸ்திரேலியா - 229 (நெதர்லாந்துக்கு எதிராக)
* தென் ஆப்பிரிக்கா - 221 (நெதர்லாந்துக்கு எதிராக)

No comments:
Post a Comment