இன்று ஏப்ரல் 26ஆம் திகதி. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ஆம் திகதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டு பிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) 2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001 இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 26 ஆம் திகதி இத்தினத்தின் நிகழ்வுகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தன்று கருத்தரங்குகள், கூட்டங்கள், விசேட நிகழ்ச்சித் திட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது.
சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் எனும்போது மனிதனின் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தை வழங்கி அக்கண்டுபிடிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கத்தை வழங்கும் அதேநேரத்தில் கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளும் இத்தினத்தன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. அதேபோல கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விசேடமாக இத்தினத்தன்று மின்விளக்கைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன்ää கணனி மென்பொருளைக் கண்டுபிடித்த புலோரியென் மியுலர் மற்றும் பிரச்சினைகளுக்குரிய விடயங்களை நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஹியுலெடி சுப்பர்மேன் ஜெரிமி பிரிப்ஸ் ஆகியோர் இத்தினத்தன்று விசேடமாக நினைவுகூரப்படுவர்.
இந்திய இலங்கை போன்ற நாடுகளில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகக் குறைவு. இடைக்கிடையே ஒரு சில கருத்தரங்குகள், பதாதைகள் மூலம் நிகழ்ச்சித் திட்டத்தை முடித்துக் கொள்கின்றன. உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு தேவைப்படக்கூடிய ஒரு விடயத்தை கண்டுபிடிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளர் அல்லது சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு ஆக்கத்தை முன்வைக்கக்ககூடிய கலைஞர் அல்லது ஓவியன் இத்தினத்தன்று பிரபல்யப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படுபவனாக இருந்தால், இந்நிகழ்ச்சித் திட்டத்தில் யாராவது ஒருவராவது பயனையடைந்த திருப்தி இருக்கலாம். எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
உசாத்துணை
http://www.wipo.int/ip-outreach/en/ipday/2012/
http://www.wipo.int/pressroom/en/articles/2012/article_0007.html
http://www.prnewswire.com/news-releases/world-intellectual-property-day-salutes-visionary-innovators-149024745.html
http://www.wipo.int/ip-outreach/en/ipday/archive.html
No comments:
Post a Comment