Saturday 10 January 2015

சிறுபான்மையினத்தவர்களினால் தீர்மானிக்கப்பட்ட 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், ஒரே பார்வையில்… – புன்னியாமீன்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு செய்யப்பட்டு ஆறாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஜனவரி 09 ம் திகதி பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கும், மாற்று ஆட்சியொன்றை எதிர்பார்த்தவர்களுக்கும் அளவுகடந்த மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மையாகும்.

நாடுபூராகவும் ஜனவரி 08. 2015 அன்று நடைபெற்று முடிந்த இத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை விட 449,072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார். இதில் மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 (47.58%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள்தான் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் தீர்மானம் மிக்க சக்தியாக அமைந்தது என்பது தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்திய உறுதியான அடிப்படைகளாகும். தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் எதிர் நோக்கிய சவால்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. அதேபோல முஸ்லிம்கள் அண்மைய காலங்களில் இந்நாட்டில் முகம்கொடுத்த கசப்பான அசம்பாவிதங்களும், ஒடுக்குமுறைகளும் சிறுபான்மையினரின் வாக்குகளை கட்சி அரசியலுக்கு அப்பால் இருந்து தீர்மானிப்பதில் பின்புலங்களாக இருந்துள்ளதை மறுக்க முடியாது.

முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவித்ததிலிருந்து தமது நிலைப்பாட்டைத் தீர்மானித்து விட்டார்கள். அரசியல் தலைமைகளின் தீர்மானம் முஸ்லிம்களின் வாக்குகளில் செல்வாக்குச் செலுத்தவில்லை. இதற்கு மாற்றமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் தலைமைகளின் தீர்மானத்துக்கு தலைசாய்த்து தமது வாக்குப் பலத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மைத்திரிபால பெற்ற 6,217,162 (51.28%) வாக்குகளில் வடக்கு, கிழக்கு வாக்குகளைக் கழித்தால் மைத்திரி பெற்றிருப்பது 52,39,051 வாக்குகளே (வடக்கு கிழக்கில் மைத்திரிக்கான வாக்கு 9,78,111)
அதே நேரம் ராஜபக்‌ஷ பெற்ற 5,768,090 (47.58%) வாக்குகளில் வடக்கு கிழக்கு வாக்குகளைக் கழித்தால் அவர் பெற்றிருப்பது 54,44 ,490 வாக்குகளாகும் (வடக்கு கிழக்கு வாக்குகளில் ராஜபக்ஷவுக்கான வாக்கு 3,23,600) இதனை அவதானிக்கும் போது ராஜபக்ஷவே வெற்றியீட்டியிருக்க வேண்டும்.

அதேநேரம் வடக்கு கிழக்கு தவிர்ந்து இலங்கையின் ஏனைய தொகுதி  முடிவுகளை அவதானிக்கும் போதும் சிறுபான்மையோர் அதிகம் வாழும் தொகுதிகளில் மைத்திரியே வெற்றியீட்டியுள்ளார் என்பதையும் அவதானித்தல் வேண்டும். ஆகவே  7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவு  சிறுபான்மையினத்தவர்களினால் தீர்மானிக்கப்பட்ட முடிவாகவே   இனங்காட்டலாம்.

இதனை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம்.

மேல் மாகாணம்

கொழும்பு மாவட்டம் 

மைத்திரிபால சிறிசேன  725 073  (55.93%)
மஹிந்த ராஜபக்ஷ  562 614 (43.4%)

செல்லுபடியான வாக்குகள் 1 296 360 (98.83%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 15 334 (1.17%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 1 311 694 (82.67%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 1 586 598

கம்பஹா மாவட்டம் 

மைத்திரிபால சிறிசேன 669 007 (49.83%)
மஹிந்த ராஜபக்ஷ  664  347 (49.49%)

செல்லுபடியான வாக்குகள் 1 342 496  (98.92%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14 647 (1.08%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 1 357 143 (82.88%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 1 637 537

களுத்துறை மாவட்டம் 

மஹிந்த ராஜபக்ஷ  395 890 (52.65%)
மைத்திரிபால சிறிசேன 349 404 (46.46%)

செல்லுபடியான வாக்குகள் 751 984 (98.9%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8 381 (1.1%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 760 365 (84.73%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 897 349

மத்திய மாகாணம்

மஹநுவர மாவட்டம் 

மைத்திரிபால 466 994 (54.56%)
மஹிந்த 378 585  (44.23%)

செல்லுபடியான வாக்குகள் 855 908 (98.73%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10 993 (1.27%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 866 901 (82.63%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 1 049 160

மாத்தளை மாவட்டம் 

மஹிந்த 158 880  (51.41%)
மைத்திரிபால 145 928 (47.22%)

செல்லுபடியான வாக்குகள் 309 022 (98.83%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3653  (1.17%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 312 675 (82.35%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 379 675

நுவரெலியா மாவட்டம் 

மைத்திரிபால 272 605 (63.88%)
மஹிந்த 145 339 (34.06%)

செல்லுபடியான வாக்குகள் 426 766 (98.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7329 (1.69%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 434 095 (81.27%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 534 150

தென் மாகாணம்

காலி மாவட்டம் 

மஹிந்த 377 126 (55.64%)
மைத்திரிபால 293 994 (43.37%)

செல்லுபடியான வாக்குகள் 677 811 (99.05%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6516  (0.95%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 684 327  (83.49%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 819 666

மாத்தறை மாவட்டம் 

மஹிந்த 297 823 (57.81%)
மைத்திரிபால 212 435  (41.24%)

செல்லுபடியான வாக்குகள் 515 150 (99.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4891 (0.94%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 520 041  (83.36%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 623 818

ஹம்பாந்தோட்டை மாவட்டம் 

மஹிந்த 243 295 (63.02%)
மைத்திரிபால 138 708  (35.93%)

செல்லுபடியான வாக்குகள் 386 076  (99.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3351  (0.86%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 389 427  (84.13%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 462 911

வட மாகாணம்

யாழ்ப்பாணம் மாவட்டம் 

மைத்திரிபால 253 574  (74.42%)
மஹிந்த 74 454  (21.85%)

செல்லுபடியான வாக்குகள்  340 751 (97.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10 038  (2.86%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 350 789  (66.28%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 529 239

வன்னி மாவட்டம் 

மைத்திரிபால 141 417  (78.47%)

மஹிந்த 34 377 (19.07%)

செல்லுபடியான வாக்குகள் 180 225 (98.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3416 (1.86%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 183 641 (72.57%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 253 058

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம் 

மைத்திரிபால 209 422 (81.62%)
மஹிந்த 41 631 (16.22%)

செல்லுபடியான வாக்குகள்  256 586 (99%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 258 (0 1%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 259 166  (70.97%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 365 167

திகாமடுல்லை மாவட்டம் 

மைத்திரிபால 233 360  (65.22%)
மஹிந்த 121 027   (33.82%)

செல்லுபடியான வாக்குகள் 357 817  (99.27%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2625 (0.73%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 360 442  (77.39%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்  465 757

திருகோணமலை மாவட்டம் 

மைத்திரிபால 140 338  (71.84%)
மஹிந்த 52 111 (26.67%)

செல்லுபடியான வாக்குகள் 195 356  (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1805 (0.92%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 197 161  (76.76%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 256 852

வடமேல் மாகாணம்

குருணாகல் மாவட்டம் 

மஹிந்த 556 868  (53.46%)
மைத்திரிபால 476 602 (45.76%)

செல்லுபடியான வாக்குகள் 1041 624 (99.12%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9285 (0.88%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 1050909 (82.98%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 1266443

புத்தளம் மாவட்டம் 

மைத்திரிபால 202073  (50.04%)
மஹிந்த 197751 (48.97%)

செல்லுபடியான வாக்குகள் 403850 (98.95%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4300 (1.05%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 408150 (73.81%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 553009

வடமத்திய மாகாணம்

அநுராதபுரம் மாவட்டம் 

மஹிந்த 281161 (53.59%)
மைத்திரிபால 238407 (45.44%)

செல்லுபடியான வாக்குகள் 524633 (99.15%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4500 (0.85%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 529133 (83.1%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 636733

பொலன்னறுவை மாவட்டம்

மைத்திரிபால 147 974  (57.8%)
மஹிந்த 105640  (41.27%)

செல்லுபடியான வாக்குகள் 255996 (99.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1790 (0.69%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 257786 (83.94%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 307 125

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை மாவட்டம் 

மஹிந்த 278130 (51.82%)
மைத்திரிபால 252533 (47.05%)

செல்லுபடியான வாக்குகள் 536 771  (98.8%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6515 (1.2%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 543286 (83.6%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 649 878

இரத்தினபுரி மாவட்டம்

மஹிந்த 379053 (55.74%)
மைத்திரிபால 292514 (43.01%)

செல்லுபடியான வாக்குகள் 680084  (98.89%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7656  (1.11%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 687740  (84.9%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 810 082

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம் 

மைத்திரிபால 249524 (49.21%)
மஹிந்த 249243 (49.15%)

செல்லுபடியான வாக்குகள் 507070 (98.47%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7871  (1.53%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 514941 (82.99%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 620 486

மொனராகலை மாவட்டம் 

மஹிந்த 172745 (61.45%)
மைத்திரிபால 105276 (37.45%)

செல்லுபடியான வாக்குகள் 281116 (98.79%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3449 (1.21%)
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 284565 (83.75%)
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 339797

இறுதித் தேர்தல் முடிவுகள்.

மைத்திரிபால  6217162  (51.28%)
மஹிந்த  5768090 (47.58%)

நாமல் ராஜபக்ஷ 15726 0.13%
இப்றாஹிம் மிப்லார் 14379 0.12%
பனாகொட டொன் பிரின்ஸ் சொலமன் அநுர லியனகே 14351 0.12%
ருவனதிலக பேதுரு ஆராச்சி 12436 0.1%
ஐதுருஸ் மொஹமட் இல்லியாஸ் 10618 0.09%
துமிந்த நாகமுவ 9941 0.08%
சிறிதுங்க ஜயசூரிய 8840 0.07%
சரத் மனமேந்திர 6875 0.06%
பாணி விஜேசிரிவர்தன 4277 0.04%
அநுருத்த பொல்கம்பல 4260 0.04%
சுந்தரம் மஹேந்திரன் 4047 0.03%
எம். பி. தெமிணிமுல்ல 3846 0.03%
பத்தரமுல்லே சீலரதன தேரோ 3750 0.03%
பிரசன்ன பிரியங்கர 2793 0.02%
ஜயந்த குலதுங்க 2061 0.02%
விமல் கீகனகே 1826 0.02%
செல்லுபடியான வாக்குகள் 12123452 98.85%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 140925 1.15%
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு 12264377 81.52%
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 15044490

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

6,061,727

குறைந்த பட்ச வாக்குகளை விட மைத்திரிபால சிறிசேன  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

155,435

இரண்டாம் இடத்தைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்களை விட அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

449,072



மைத்திரிபால சிறிசேன பற்றி சில குறிப்புகள்
—————————————————————
பிறப்பு : 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்பக்கல்வி : பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி.

உயர்கல்வி : ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் டிப்ளோமா பட்டம்

அரசியல் ஈடுபாடு : பாடசாலை பருவத்தில் இடதுசாரி கொள்கைகளில் ஈடுபாடு

குடும்பம் : மனைவி ஜெயந்தி புஷ்பகுமார, 3 பிள்ளைகள்

அரசியல் பிரவேசம் : 17 வயதில் பொலன்னறுவ ஸ்ரீல.சு.க. இளைஞர் அமைப்பு செயலாளர்.

சிறைவாசம் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மட்டு சிறையில் அடைப்பு

முழுநேர அரசியல் : 1978 இல் சு.க. வில் முழுநேர அரசியலில் குதிப்பு

அமைப்பாளர் : 1982 இல் பொலன்னறுவை சு.க. அமைப் பாளராக நியமிப்பு

பாராளுமன்றம் தெரிவு : 1989இல் முதற்தடவையாக பாராளுமன்றம் தெரிவு.

பிரதி அமைச்சர் : 1994 தேர்தலில் அதிகூடிய வாக்குகள் பெற்று தெரிவாகி நீர்ப்பாசன பிரதி அமைச்சராக நியமிப்பு

அமைச்சர் : 1997 இல் அமைச்சரவை மாற்றத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமிப்பு

கட்சி செயலாளர் : 2001ஆம் ஆண்டில் சு.க. செயலாளராக நியமிப்பு

அமைச்சு பதவிகள் : நாடாளுமன்ற விவகார அமைச்சர், ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சர், விவசாய அமைச்சர், சுகாதார அமைச்சர்

சபை முதல்வர் : 2004 இல் சபை முதல்வராக நியமிப்பு

குண்டுத்தாக்குதல் : 2008 அக்டோபர் 9 இல் பிலியந்தலையில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிர்தப்பல்

அரசிலிருந்து விலகல் : 2014 நவம்பர் 21 இல் ஐ.ம.சு.மு.வில் இருந்து விலகி பொது வேட்பாளராக போட்டி

ஜனாதிபதியாக தெரிவு : 2015 ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு

No comments:

Post a Comment