Tuesday 23 December 2014

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி 2014 - சிறுகதைப் போட்டியில் மஸீதா புன்னியாமீன் முதலிடம்!

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் ​இற்கான பரிசளிப்பு நிகழ்வு 2014 டிசம்பர் மாதம் 22ம் திகதி முற்பகல் செத்சிறிபாய நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் எச்.டி..எஸ்.மல்காந்தி, அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரபல சிங்கள எழுத்தாளர் மடுலுகினிய விஜேரத்ன, தமிழ், சிங்கள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் கதை, சித்திரம், குறுநாடகப் பிரதியாக்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள், சான்றிதழ்கள், புத்தகப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழி மூல தமிழ் போட்டியில் உடத்தலவின்னையைச் சேர்ந்த மஸீதா புன்னியாமீன் சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.



அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் ஆக்கங்களின் தொகுப்பாக 'பிரகாசம்' என்ற நூலும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Tinted Glassets - Tinted Glassets - Tinted Glassets - Tinted
    Tinted Glassets - Tinted Glassets - Tinted Glassets 2019 ford ecosport titanium - titanium nose jewelry Tinted Glassets - Tinted Glassets - Tinted Glassets - Tinted titanium tube Glassets titanium quartz crystal - Tinted Glassets - Tinted Glassets - Tinted Glassets titanium rod in leg

    ReplyDelete