Wednesday 10 December 2014

500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தல் - புன்னியாமீன் -

500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற  2ஆவது ஜனாதிபதித் தேர்தல்
இலங்கையின் 2வது ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
1. திரு. ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)
2. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)
3. திரு. ஒஸி அபயகுணவர்தனா (ஸ்ரீலங்கா மக்கள் கட்சி)
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம். இலங்கையின் 1வது ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய கால கட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.
பல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும், 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் ஜனாதிபதித் தேர்தலையும், தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும்,  பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது)



1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காணமுடிந்தது.
1988 டிசம்பர் 19ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும்கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பமுடியாத நிலைகூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால் கொலை செய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.
பொலிஸ் அறிக்கையின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதிவரை 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால்வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360க்கு மேற்பட்ட பொதுமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 100க்கும் மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாயவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன், வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது.
களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலறுவை,  மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும் களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, பதுளை,  மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகிறது.
இத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் 5,186,223 (55.32%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.
யாப்பு விதிகளுக்கு இணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு. ஆர். பிரேமதாச அவர்கள் 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
1988 ஜனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளைவிட (2,547,389) மேலதிகமாக 21,810 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை விட 279,339 மேலதிக வாக்குகளையும் திரு. பிரேமதாச பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணம் –
கொழும்பு மாவட்டம்
ஆர். பிரேமதாச  (U.N.P)  361,337  (49.14%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  339,958 (46.23%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   34,020 (4.63%)
பதியப்பட்ட வாக்குகள்  1,088,780
செல்லுபடியான வாக்குகள்  735,315
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,295  (1.51%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 (68.57%)
கம்பஹா மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  350,092 (48.08%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  355,553 (48.83%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   22,467 (3.09%)
பதியப்பட்ட வாக்குகள்  969,735
செல்லுபடியான வாக்குகள்  728,112
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,054 (1.36%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 738,166 (76.12%)
களுத்துறை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  169,510 (46.74%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  179,761 (49.57%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   13,375 (3.69%)
பதியப்பட்ட வாக்குகள்  570,118
செல்லுபடியான வாக்குகள்  362,646
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,537 (1.77%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 369,183 (64.76%)
மத்திய மாகாணம் -
கண்டி மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  234,124 (54.88%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  186,187 (43.65%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,266  (1.47%)
பதியப்பட்ட வாக்குகள்  628,240
செல்லுபடியான வாக்குகள்  426,577 (98.57%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,167 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)
மாத்தளை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  37,007  (57.85%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  25,825  (40.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   1,135  (1.77%)
பதியப்பட்ட வாக்குகள்  214,938
செல்லுபடியான வாக்குகள்  63,967  (98.29%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,110  (17.1%)
அளிக்கப்பட்ட வாக்குகள்  65,077  (30.28%)
நுவரெலியா மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  112,135 (62.15%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  64,907  (35.98%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,371  (1.87%)
பதியப்பட்ட வாக்குகள்  229,769
செல்லுபடியான வாக்குகள்  180,413 (98.19%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,320 (1.81%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 183,733 (79.96%)
தென் மாகாணம்
காலி மாவட்டம்
ஆர். பிரேமதாச    (U.N.P)   124,912 (44.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  148,615 (53.09%)ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,417  (2.29%)
பதியப்பட்ட வாக்குகள்  571,303
செல்லுபடியான வாக்குகள்  279,944 (98.43%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,461 (1.57%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)
மாத்தறை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  45,399  (42.93%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  57,424  (54.30%)ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,922  (2.76%)
பதியப்பட்ட வாக்குகள்  451,934
செல்லுபடியான வாக்குகள்  105,745 (98.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,003 (1.86%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 107,748 (23.84%)
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  41,198  (49.62%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (U.N.P)  39,343  (47.39%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   2,478  (2.98%)
பதியப்பட்ட வாக்குகள்  295,180
செல்லுபடியான வாக்குகள்  83,019  (95.56%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,855 (4.44%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 86,874  (29.43%)
வடமாகாணம்
யாழ்ப்பாண மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  33,650  (28.03%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  44,197  (36.82%)ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   42,198 (35.15%)
பதியப்பட்ட வாக்குகள்  591,782
செல்லுபடியான வாக்குகள்  120,045 (93.38%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,517 (6.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)
வன்னி மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  10,580  (55.78%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  4,889  (25.77%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   3,500  (18.45%)
பதியப்பட்ட வாக்குகள்  142,723
செல்லுபடியான வாக்குகள்  18,969  (96.40%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   708  (3.60%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 19,677  (13.79%)
கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  61,657  (50.99%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  21,018  (17.38%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   38,243 (31.63%)
பதியப்பட்ட வாக்குகள்  215,585
செல்லுபடியான வாக்குகள்  120,918 (95.91%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,163 (4.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)
திகாமடுல்லை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  96,420  (50.77%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  83,137  (43.78%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   10,352 (5.45%)
பதியப்பட்ட வாக்குகள்  265,768
செல்லுபடியான வாக்குகள்  189,909 (98.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,802 (1.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 193,711   (72.89%)
திருகோணமலை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  36,841  (45.70%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  29,679  (36.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   14,103 (17.49%)
பதியப்பட்ட வாக்குகள்  152,289
செல்லுபடியான வாக்குகள்  80,623  (98.38%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,326 (1.62%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 81,949  (53.81%)
வடமேல் மாகாணம்
குருநாகலை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  198,662 (51.12%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  182,223 (46.89%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   7,717  (1.99%)
பதியப்பட்ட வாக்குகள்  784,986
செல்லுபடியான வாக்குகள்  388,602 (98.91%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,281 (1.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)
புத்தளம் மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  125,339 (55.89%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  94,823  (42.28%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   4,093  (1.83%)
பதியப்பட்ட வாக்குகள்  319,003
செல்லுபடியான வாக்குகள்  224,255 (98.70%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,965 (1.30%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 227,220 (71.23%)
வடமத்திய மாகாணம்
அநுராதபுர மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  56,951  (42.94%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  73,154  (55.15%)ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   2,529  (1.91%)
பதியப்பட்ட வாக்குகள்  334,074
செல்லுபடியான வாக்குகள்  132,634 (98.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,027 (1.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)
பொலநறுவை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  26,392  (55.54%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  20,173  (42.45%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   957  (2.01%)
பதியப்பட்ட வாக்குகள்  163,741
செல்லுபடியான வாக்குகள்  47,522  (97.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,157  (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 48,679  (29.73%)
ஊவா மாகாணம்
பதுளை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  80,779  (60.08%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  50,223  (37.36%)
ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P)   3,440  (2.56%)
பதியப்பட்ட வாக்குகள்  329,462
செல்லுபடியான வாக்குகள்  134,442
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,276 (2.38%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 (41.80%)
மொனராகலை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  16,872  (63.21%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  9,123  (34.18%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   697  (2.61%)
பதியப்பட்ட வாக்குகள்  161,927
செல்லுபடியான வாக்குகள்  26,692
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   851  (3.09%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 27,543  (17.01%)
சப்பிரகமுவ மாகாணம்
இரத்தினபுரி மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  180,622 (51.75%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   (S.L.F.P)  159,879 (45.81%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   8,516  (2.44%)
பதியப்பட்ட வாக்குகள்  457,224
செல்லுபடியான வாக்குகள்  349,017 (98.84%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,113 (1.16%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 (77.23%)
கேகாலை மாவட்டம்
ஆர். பிரேமதாச   (U.N.P)  168,720 (57.11%)
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  119,769 (40.54%)
ஓஸி அபேகுணவர்தனா  S.L.M.P)   6,923  (2.34%)
பதியப்பட்ட வாக்குகள்  437,178
செல்லுபடியான வாக்குகள்  295,412 (98.57%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,277 (1.43%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 299,689 (68.55%)
இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988
இறுதித் தேர்தல் முடிவுகள்
ஆர். பிரேமதாச   (U.N.P)  2,569,199 (50.43%)ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  (S.L.F.P)  2,289,860 (44.94%)
ஓஸி அபேகுணவர்தனா  (S.L.M.P)   235,719 (4.63%)
பதியப்பட்ட வாக்குகள்  9,375,742
செல்லுபடியான வாக்குகள்  5,094,778 (98.24%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   91,445 (1.76%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 (55.32%)
இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
   2,547,389
குறைந்த பட்ச வாக்குகளை விட ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    21,810
இரண்டாம் இடத்தைப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை விட திரு ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
279,339

No comments:

Post a Comment